Breaking News

ஆபத்தான நிலையில் அரசு ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர் விடுதி!

விருதுநகர், அக்.25-

விருதுநகர் அருகே உள்ள அரசு ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர் விடுதி, முறையான பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து காணப்படுவதோடு, இடிந்து விழும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனை உடனடியாக மறுசீரமைக்க கோரியும், அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை, மின்சார வசதியை உடனடியாகஏற்படுத்தி தர வேண்டுமென விடுதி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி வாரியம் மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் அருப்புக்கோட்டையில் கடந்த 2003 ஆம் ஆண்டு ரூபாய்.31.50 லட்சம் மதிப்பீட்டில் அரசு ஆதிதிராவிடர் கல்லூரி மாணவ விடுதி கட்டப்பட்டு தற்போது வரை செயல்பட்டு வருகிறது. அரசு மாணவர் விடுதியில் 50 பேர் தங்கி பயில கூடிய வசதியுள்ள நிலையில், 29 மாணவர்கள் மட்டுமே தங்கி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், அரசு மாணவர் விடுதியில் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். விடுதியின் சுற்றுச் சுவர்கள் மற்றும் தடுப்பு சுவர்கள் முழுவதும் சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் காட்சியளிக்கிறது. அதேபோல், விடுதியின் ஜன்னல் கதவுகள் மற்றும் கழிவறை கதவுகள் சேதமடைந்து காணப்படுகின்றன. விடுதியில் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி இல்லாததாலும், விடுதியின் கட்டிடங்கள் இடிந்து விழும் என்ற அச்சத்தில் பெரும்பாலான மாணவர்கள் விடுதியை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர்.

🔥Also Read
👆ஹோட்டல்களில் சுகாதாரமற்ற நிலையில் உணவு விநியோகம்! 

இடியும் நிலையில் உள்ள அரசு மாணவர் விடுதியை உடனடியாக மறுசீரமைக்க கோரியும், அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை, மின்சார வசதியை உடனடியாகஏற்படுத்தி தர வேண்டுமென விடுதி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

🔥Also Read

No comments

Thank you for your comments