Breaking News

அதிமுக ஆட்சியினர் கொள்ளையடிப்பதிலும் தங்களை பாதுகாத்து கொள்வதிலுமே குறியாக இருந்தனர்!

திருவள்ளூர் :

திருவள்ளூர் மாவட்டம் கச்சூர் ஊராட்சியில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 16 பேரின் குடும்பத்தினருக்கு அரசு நிதி உதவியில்  இலவச  வீடுகள்  வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை  பால்வளத்துறை அமைச்சர் நாசர் ரிப்பன் வெட்டி  குத்துவிளக்கேற்றி திறந்து வைத்த அவர் வீட்டின் சாவியை பயனாளிகளுக்கு வழங்கினார்.   பின்னர்  வீட்டுமனை பட்டா இல்லாத 57 பேருக்கு   இலவச வீட்டுமனை பட்டாவினை  வழங்கினார்.

அமைச்சர் நாசர் விழாவில் பேசுகையில்,  கட்சியினர்  திடீரென எழுந்து நின்றதால் தனது இடத்தில் வந்து உட்கார்ந்து கொள்ளுங்கள் என பேச்சை நிறுத்தி அவர்களை ஒதுங்கிப் போக சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த அதிமுக ஆட்சியினர் கொள்ளையடிப்பதிலும் தங்களை பாதுகாத்து கொள்வதிலுமே  குறியாக இருந்ததாக அமைச்சர்  தெரிவித்தார்.

புதியதாக திறக்கப்பட்ட அரசு இலவச வீடுகளில் முறையாக கழிவறை மின் இணைப்புகளை வழங்க வேண்டும்என மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை வைத்தனர்.

இதில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்... அமைச்சர் நாசர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்  உள்ளிட்டோர்

இந்நிகழ்ச்சியில் பார்வையற்றவர்களுக்கு கட்டி தரப்பட்ட 16 வீடுகளிலும் உரிய மின்சாரம் இல்லாததால் கொக்கி போட்டு மின்சாரத்தை எடுத்து நிகழ்ச்சியில் ஒலிபெருக்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது மேலும் கடந்த திமுக ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்டு மின் இணைப்பு மற்றும் கழிப்பிட வசதி முழுமை பெறாமல் இருந்த நிலையில் தற்போது அதே நிலையில் குடியிருப்புகளை பார்வையற்ற பயனாளிகளிடம் அதிகாரிகள் திறந்து வைத்து ஒப்படைத்துள்ளனர்


பால்வளத் துறை அமைச்சர் சாமு நாசர் அளித்த பேட்டியில், 

தைவான் மலேசியா ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளைப் போன்று தமிழகத்திலும் ஆட்டுப்பால் ஆவினில் விற்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் ஜமுனாபாரி ஆட்டின் பாலிலிருந்து மருத்துவ குணம் வாய்ந்த ஆட்டுப் பாலை விரைவில் விற்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் வெளிமாநில பால்களின் தரம் குறித்து கேட்டபோது கூட்டுறவு பால்களை மட்டுமே நாங்கள் வாங்குகிறோம் 

9 ஆயிரத்து 480 கூட்டுறவு சங்கத்தில்  விவசாயிகளிடமிருந்து பாலினை  பெறுகிறோம். தரக் கட்டுப்பாடு வாரியம் தான் மற்ற மாநிலங்களில் இருந்து விற்பனை செய்யும் பால் குறித்து அது தன்னுடைய வேலை இல்லை எனவும் தெரிவித்த அவர்  ஆவினில் அனைவரும் பணம் கொடுத்துதான் விளம்பரம் இனிப்பை வாங்க வேண்டும். 

ஆவினில் இனிப்பு ஒரு கிலோ 425 ரூபாய்க்கு  குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் கடந்தமுறைதற்போதைய 5 கோடிரூபாய்  ஆர்டர்கிடைத்துள்ளதாகவும் கடந்தஆட்சிக்காலத்தில் 18 டன் இனிப்பு விற்பனை ஆனதாகவும் தற்போது 40 டன் தீபாவளிக்கு இனிப்பு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்க பட்டாலும் ஆரணி ஆற்றின் குறுக்கே  மேம்பாலம்அமைக்கும் பணியில் அதிகாரிகள் முதலமைச்சரும்  வேகமாக இருப்பதால் விரைந்து பணிகள் மேற்கொள்ளப்படும்என்றும் அவர் தெரிவித்தார்.

No comments

Thank you for your comments