Breaking News

சுகாதார துணை இயக்குனர் மருத்துவர் பழனியின் வங்கி லாக்கரில் 160 சவரன் தங்க ஆபரணங்கள் மற்றும் ரூ.29,80,500 பறிமுதல்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் கடந்த 18ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் அலுவலகத்தில் இருந்த கணக்கில் வராத இரண்டு லட்சத்து 2 ஆயிரம் பணம் பறிமுதல்.

இதனை தொடர்ந்து சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் வங்கி லாக்கரில் 160 சவரன் நகை மற்றும் 29 லட்சம் ரொக்கம் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.


காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அரசு மருத்துவமனை அருகில் காஞ்சிபுரம் மாவட்ட துணை இயக்குனர் நலப்பணிகள் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

சுகாதார நலப் பணிகள் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் மாவட்டத்திலுள்ள இருபத்தி நான்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு இருந்துதான் கொரானா தடுப்பு பணிகள் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில் கடந்த 18ஆம் தேதி 10க்கும் மேற்பட்ட போலீசார் திடீரென சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில்  தொழிற்சாலைகள் மருத்துவமனைகள் கல்வி நிலையங்கள் உள்ளிட்டவற்றுக்கு சுகாதார சான்றிதழ் வழங்குவதற்கு லஞ்சமாக பெற்று வைத்திருந்த துணை இயக்குனர் மருத்துவர் பழனி இடமிருந்து 1,66,900, ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் சீனிவாசனிடம் இருந்து26,490, இளங்கோவனிடம் இருந்து 8,900  என  2 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மூவரிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

🔥Also Read

இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி கீதா தலைமையில் சுகாதார துறை துணை இயக்குனர் பழனியின் சென்னை திருமங்கலம் பகுதியில் ICICI கிளை வங்கியில் லாக்கர் சோதனை செய்ததில் 160 சவரன் தங்க ஆபரணங்கள் மற்றும் 29 லட்சத்து 80 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கம் பணத்தை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

🔥Also Read

No comments

Thank you for your comments