சாலையை சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம்
விருத்தாசலம்:
விருத்தாசலத்தில் சாலையை சீரமைக்க கோரி தமிழ்நாடு இளைஞர் சங்கம் மற்றும் இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி இணைந்து சாலை மறியல் செய்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் புதுக்கூரைப்பேட்டை - உளுந்தூர்பேட்டை நோக்கிச் செல்லும் தார்சாலை குண்டும் குழியுமாக பல நாட்களாக கிடப்பில் போடப்பட்டது
அந்த வழியாக செல்ல வேண்டிய பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், சுமைகள் அதிகமாக ஏற்றி வரும் வாகனங்கள் மிக சிரமப்பட்டு வந்த நிலைமையில் உள்ளன.
இந்த சாலையை சரிசெய்ய கோரி தமிழ்நாடு இளைஞர் சங்கம் வட்டச்செயலாளர் ஐயப்பன் தலைமையில் நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து சாலைமறியல் ஆர்ப்பாட்டம் செய்தனர்
இதில் இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கோகுலகிறிஸ்டீபன் கலந்து கொண்டு உடனே தார் சாலையை சீரமைத்து தர கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர் இந்த சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் இந்திய புரட்சிகர மாவட்ட குழு உறுப்பினர் பீர்முகமது, குமார் உள்ளிட்டோர் 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதுபற்றி தகவலறிந்து வந்த விருத்தாசலம் காவல் ஆய்வாளர் விஜயரங்கன் தலைமையிலான காவலர்கள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரியிடம் முறையீட்டு உடனே சரி செய்து தருகிறேன் என்று அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி பின்பு கலைந்து சென்றனர் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பை காணப்பட்டது.
No comments
Thank you for your comments