Breaking News

குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை.... காஞ்சிபுரம் ஒன்றியக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட மலர்க்கொடி குமார் பேட்டி

காஞ்சிபுரம், அக்.22:

காஞ்சிபுரம் ஒன்றிய பெருந்தலைவராக திமுகவைச் சேர்ந்த மலர்க்கொடி குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த அக்.6 மற்றும் 9 ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றது. பதிவான வாக்குகள் அக்.12 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்தத் தேர்தலில் வெற்றிபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் அக்.20 ஆம் தேதி பதவியேற்றனர். 

காஞ்சிபுரம் ஒன்றியத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 18 பேரும் காஞ்சிபுரத்தை அடுத்த சிறுகாவேரிப்பாக்கத்தில் உள்ள ஒன்றியக்குழு அலுவலகத்தில் பதவியேற்றுக் கொண்டனர். 

காஞ்சிபுரம் ஒன்றியத்தில் திமுக சார்பில் வெற்றிபெற்ற மோகனா இளஞ்செழியன், வளர்மதி மனோகரன், பாலாஜி, ஆதிலட்சுமி, ராம்பிரசாத், ஹேமலதா, மலர்க்கொடி குமார், கோட்டீஸ்வரி, தேவபாலன், அன்பழகன், பரசுராமன், திவ்யப்பிரியா, சங்கரி, அதிமுக சார்பில் வெற்றி பெற்ற விமல்ராஜ், பேபி சசிகலா, விசிக சார்பில் ரேகா ஸ்டான்லி, பாமக சார்பில் ரமேஷ், பாஜக சார்பில் நாகலிங்கம்  ஆகிய 18 பேர் ஒன்றியக்குழு உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர். 

இதனைத் தொடர்ந்து இன்று  (அக்.22) நடைபெற்ற ஒன்றியப் பெருந்தலைவருக்கான தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட மலர்க்கொடி குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். 

பிற்பகல் நடைபெற்ற ஒன்றியக்குழு துணைத் தலைவருக்கான தேர்தலில் திமுகவைச் சேர்ந்த திவ்யப்பிரியா வெற்றி பெற்றார். இந்த நிகழ்ச்சிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், வெங்கடேசன் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் விஷ்ணுப்பிரியா ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments

Thank you for your comments