காஞ்சிபுரம், வாலாஜாபாத் ஒன்றியத்தில் ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு திமுகவினர் இடையே போட்டி.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம், வாலாஜாபாத் ஒன்றியத்தில் ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு திமுகவினர் இடையே போட்டி.
இரு திமுகவினர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு.எம்எல்ஏக்கள் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியும் சமரசம் வராததால் 3 மணி நேரம் காலம் தாமதம் ஏற்பதாதால் ஒத்தி வைக்கபட்டதாக தேர்தல் அலுவலர் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய இதற்கான ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் இன்று நடைபெற இருந்தது.
இந்நிலையில் 21 பேர் ஒன்றியக்குழு கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ள நிலையில், திமுக தரப்பில் 15 பேரும், காங்கிரஸ் தரப்பில் ஒருவரும், அதிமுக சார்பில் இரண்டு பேரும், சுயேச்சைகள் இரண்டு பேரும், பாமகவை சேர்ந்த ஒருவரும் என வெற்றி பெற்றுள்ளனர்.
திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சஞ்சய் காந்தி என்பவரும் தேவேந்திரன் என்பவரும் ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
ஒன்றிய குழுத் தலைவருக்கு இருதரப்பினர் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இது குறித்து அறிந்து உத்திரமேரூர் தொகுதி எம்எல்ஏ க. சுந்தர், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் ஆகியோர் வாலாஜாபாத் ஒன்றிய குழு அலுவலகத்திற்கு வந்து இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
காலை 10 மணிக்கு தொடங்க வேண்டிய ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் 12 மணி வரை நடை பெறாமல் உள்ளது.
இதனிடையே தேவேந்திரன் தரப்பு ஆதரவாளர்கள் ஒன்றிய குழு அலுவலகம் எதிரே சாலையில் இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு தேர்தலை நடத்தக் கோரி கோஷமிட்டனர்.
இதன் காரணமாக வாலாஜாபாத் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் ஆகியோர் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளனர்.
எம்எல்ஏக்கள் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியும் சமரசம் வராததால் 3 மணி நேரம் காலம் தாமதம் ஏற்பதாதால் ஒத்தி வைக்கபட்டதாக தேர்தல் அலுவலர் தெரிவித்தனர்
No comments
Thank you for your comments