மணவாளநல்லூர் ஊராட்சியில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்
விருத்தாசலம் :
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் ஊராட்சியில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் சிறப்பு தலைவர் சுந்தரி கொளஞ்சி தலைமையில் நடைபெற்றது
இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லெட்சுமி, தணிக்கையாளர், செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் வரவு செலவு பற்றி விளக்கி பேசினார் மற்றும் திட்ட பயனாளிகளுக்கு உள்ள உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் திறன் சாரா கூலி 21 லட்சத்து 7 ஆயிரம், திறன் சார்ந்த கூலி O.17 -லட்சம், பொருட்களுக்கான செலவு 3 லட்சத்து 69 ஆயிரம், மனித சக்தி நாட்கள்10,950 பணி செய்து 416 குடும்பங்கள் பயன் அடைந்துள்ளனர் முடிவில் ஊராட்சி செயளர் சிங்காரவேல் நன்றி கூறினார்.
அதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் நீதிராஜன் திட்ட பயனாளிகளுக்கு 100 நாள் வேலை அடையாள அட்டை வழங்கினார் இதில் ஊராட்சி மன்ற துணை தலைவர் அஞ்சலை மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
No comments
Thank you for your comments