ரோட்டரி சங்கம் சார்பில் இருசக்கர வாகன பேரணி ... போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு...
காஞ்சிபுரம் கிழக்கு ரோட்டரி சங்கம் சார்பில் போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி 50க்கு மேற்பட்ட மோட்டார் இருசக்கர வாகனங்களில் திருவள்ளூரில் தொடங்கி காஞ்சிபுரத்தில் நிறைவுபெற்றது.
காஞ்சிபுரம் கிழக்கு ரோட்டரி சங்கம், திருவள்ளூர் ஸ்பார்ட்ன்ஸ் ரோட்டரி சங்கம் மற்றும் ஸ்ரீ பெரம்பத்தூர் ரோட்டரி சங்கம் இணைந்து உலக போலியோ ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாபெரும் இருசக்கர வாகன பேரணி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் துவங்கி ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார் சத்திரம், வாலாஜாபாத் வழியாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாக விளையாட்டு திடலில் சுமார் 90 கிலோமீட்டர் பயணத்துடன் நிறைவுபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் கலந்து கொண்டனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் அவர்கள் கலந்துகொண்டு போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு பற்றி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் ( 3231) திரு.நிர்மல் ராகவன் , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.மகாலட்சுமி , மாவட்ட துணை கண்காணிப்பாளர் திரு.பிரவீன் , திருவள்ளூர் ஸ்பார்ட்ன்ஸ் ரோட்டரி சங்க தலைவர் திரு.கரண்ட் கார்த்திக், ஸ்ரீ பெரம்பத்தூர் ரோட்டரி சங்க தலைவர் திரு.லோகநாதன், ரோட்டரி மாவட்டம் பப்ளிக் இமேஜ் சேர்மன் திரு.பரத்குமார், ரோட்டரி மாவட்ட போலியோ பிளஸ் சேர்மன் திரு.கஜேந்திரன், காஞ்சிபுரம் காஸ்மிக் சிட்டியின் தலைவர் திரு.மகாவீர் மற்றும் காஞ்சிபுரம் இன்ஃபினிட்டி சங்கத்தின் தலைவர் திரு.ராஜேஷ் கலந்து கொண்டனர்.
இந்த விழாவின் ஏற்பாட்டை காஞ்சிபுரம் கிழக்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் திரு.முருகேஷ் அவர்கள் ஏற்பாடு செய்து நன்றி உரை வழங்கினார்
No comments
Thank you for your comments