லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் அஸ்திக்கு பொதுமக்கள் அஞ்சலி
விருதாச்சலம்
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்றனர்.
அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் இறந்தனர். இதையடுத்து நடந்த வன்முறையில் பத்திரிகையாளர் உட்பட 5- பேர் உயிரிழந்தனர்.
உத்திரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கார் ஏற்றிக்கொல்லப்பட்ட 4 விவசாயிகளின் அஸ்தி பேரணியாக எடுத்துவரப்பட்டு கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பாலக்கரை ரவுண்டானாவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கொல்லப்பட்ட விவசாயிகளின் அஸ்தியை விவசாய சங்கத்தினரிடம் ஒப்படைக்கும் நிகழ்வானது கடலூர் மாவட்ட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நடைபெற்றது இதில் 100-க்கும் மேற்பட்ட அனைத்து விவசாய சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments