Breaking News

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் முன்னேற்ற சங்கம் அவசர ஆலோசனைக் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம்  தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் முன்னேற்ற சங்கம் மற்றும் தோழமை சங்கத்தின் ஆதரவோடும்  ரசீது இல்லாமல் எம்சான்ட் மற்றும் மணல் லாரிகள் இயங்காது என அவசர ஆலோசனைக் கூட்டம்  மாநில தலைவர் தீனன் தலைமையில் நடைபெற்றது. 

காஞ்சிபுரம் மாவட்டம் தனியார் விடுதியில் நடைபெற்ற தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் தோழமை சங்கத்தின் உறுப்பினர்கள் முன்னிலையில் அவசர ஆலோசனை கூட்டம்  மாநில தலைவர் தீனன் தலைமையில் நடைபெற்றது.

 

அவற்றில் தமிழக அரசு போதுமான  அதிகபடியான மணல் குவாரிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் எம்சான்ட் குவாரிகளில் இருக்கும் பிரச்சனைகளான ரசீது வழங்குதல் தங்கு தடையின்றி வழங்கிட வேண்டும் என்றும் இனிவரும் காலங்களில் சங்கத்தின் சார்பாக  ரசீது இல்லாமலும்  ஓவர்லோடு நாங்கள் ஏற்ற மாட்டோம் என்பதை ஒருமித்த கருத்தோடு முடிவெடுத்துள்ளதாகவும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வழங்கப்படும் ஸ்டிக்கர்கள் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக தனியார் கமிஷன் தாரர்கள் எங்களை கட்டாயப்படுத்துகிறார்கள் இவற்றை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டிக்கர்களுக்கான உரிய விலையை மட்டும் எங்களிடம் வசூலிக்க வேண்டும் என்றும் இக்கோரிக்கையை முன்னிறுத்தியே இக்கூட்டம் நடைபெற்றது.

தமிழக அரசு சீரான சிறப்பான ஒரு முடிவை எடுத்து அரசு மணல் குவாரிகளை உயர்த்தி தர வேண்டும் என்கின்ற கோரிக்கையை வலியுறுத்தி இக்கூட்டம் நடைபெற்றதாக கூறினார். 



இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் நகர தலைவர் தம்பிரான், நகர செயலாளர் வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் விஜயராகவன், மோகன், குமரன், மதி, சதீஷ்   ஆகியோர் 100க்கும் லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.



No comments

Thank you for your comments