ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேர்தல் விதிமீறல்... புகார்...
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வில்லிவலம் கிராம ஊராட்சி தலைவராக திரு. மோகன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அக் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களாக 6பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கான தேர்தல் இன்று ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தில் காலை 10 மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் திருஞானசம்பந்தம் முன்னிலையில் தொடங்கியது.
துணைத்தலைவர் பதவிக்கு திருமதி சீதா கோதண்டன் என்பவர் போட்டியிட்டார். இவருக்கு ஆதரவாக மூன்று பேரும் மற்றும் தனது வாக்கு என நான்கு வாக்கு ஆதரவாக பதிவாகியுள்ளது.
இந்நிலையில் தன்னை துணைத் தலைவராக அறிவிக்காமல் தேர்தல் அலுவலர் முறைகேடாக மற்றொரு நபரை அதிகம் உள்ளதாக அறிவித்தார்.
இந்த அறிவிப்பு தமிழ்நாடு பஞ்சாயத்து சட்ட விதிகளுக்கு முரணானது இந்திய அரசியலமைப்பு சட்டத்திறகு எதிரானது எனக்கூறி காஞ்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவரது ஆதரவு உறுப்பினர்களுடன் புகார் மனு அளித்தனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் முறையாக விசாரித்து மீண்டும் நேர்மையான முறையில் துணைத்தலைவர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
No comments
Thank you for your comments