தேன்கனிக்கோட்டை அருகே கிராம தேவதைகள் உற்சவ விழா
கிருஷ்ணகிரி, அக்.22-
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தாவரகரை ஊராட்சிக்குட்பட்ட கெண்டிகான பள்ளி கிராமத்திலுள்ள அம்மன் கோயிலில் நவராத்திரி விழா பூஜை நடைபெற்றது. விஜயதசமி விழாவை முன்னிட்டு கிராம தேவதைகளின் உற்சவ ஊர்வலம் நடைபெற்றது.
இதில் கிராம தேவதை தெய்வங்களான சிக்கம்மா, தொட்டம்மா. முனீஸ்வரர், பசவேஷ்வரர் ஆகிய சாமி சிலைகளை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வேத மந்திரங்கள் ஒலிக்க புனித நிர்தெளித்து சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை நடைபெற்றது.
மேளதாளங்கள் முழங்க சுவாமி சிலைகளின் உற்சவ ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக கிராமப் பெண்கள் மாவிளக்கு ஏந்தி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக தொழிலதிபர் வரதராஜன் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்.
தாவரகரை ஊராட்சி மன்ற தலைவர் யசோதா பத்தியப்பா, ஒன்றிய கவுன்சிலர் நாகராஜ், விவசாய சங்க தலைவர் வீரப்பா, துணைத் தலைவர் சதீஷ் ,பெங்களூர் முன்னாள் மேயர் வெங்கடேஷ் மூர்த்தி, பெங்களூர் முன்னாள் கவுன்சிலர் சுரேஷ் ,பெங்களூர் மாவட்ட கவுன்சிலர் லக்ஷ்மி சுரேஷ், கோயில் அர்ச்சகர் முத்து கிருஷ்ணன் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டன.
💮💮💮💮 ⚘ 💮💮💮💮
வேலூர் மாவட்டம் காட்பாடி பிரம்மபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிரம்மபுரம் ஊராட்சி மன்ற தலைவராக ராதாகிருஷ்ணன் தனது பதவியை ஏற்றுக்கொண்டார். அவருடன் 12வார்டு உறுப்பினர்களும் தங்களது பதவியை ஏற்றுக்கொண்டனர்
No comments
Thank you for your comments