கழுத்தறுத்து மனைவி கொலை.... கணவர் போலிஸில் சரண்...
கிருஷ்ணகிரி:
தேன்கனிக் கோட்டை அருகே கழுத்தறுத்து மனைவி கொலை கணவர் போலிஸில் சரணடைந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள ரங்கசந்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் என்ற விஜயகுமார் (வயது 38).
கூலி தொழிலாளியான இவருக்கு தேன்கனிக்கோட்டை அருகே கக்கதாசம் அடுத்துள்ள குஞ்சிகிரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ரூபா (வயது 33) என்பவருடன் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு கார்த்திகா(வயது 10) மகளும், சரண் (வயது 8) என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் மனைவி மீது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு கணவன் மனைவி இருவருக்கும் கடந்த 5 நாட்களுக்கு முன் வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் கோபித்துக்கொண்டு ரூபா குஞ்சுகிரி பாளையத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் நேற்று இரவு கார்த்திக் மனைவியை தேடி மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். இரவு தங்கி காலையில் மாமியார் முனிரத்தினம்மாவிடம் தோட்டத்தில் ஏர் உழுத டிராக்டர் வந்திருப்பதாக கூறி குழந்தைகள் இருவரையும் அழைத்து செல்லுமாறு கார்த்திக் கூறியதால் குழந்தைகளை அழைத்து கொண்டு தோட்டத்திற்கு சென்றுவிட்டார்.
இன்று மதியம் மீண்டும் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த கார்த்திக் வீட்டிலிருந்த அருவாமனை எடுத்து மனைவி ரூபாவை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதனால் துடிதுடித்து ரூபா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்துக்குச் சென்று தன் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டதாக கூறி சரணடைந்தார்.
போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இதுகுறித்து போலிஸார் விசாரணை செய்துவருகின்றனர்.
No comments
Thank you for your comments