Breaking News

மீனவமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் எம்பி விஜய்வசந்த்

 கன்னியாகுமரி அக்-21

நித்திரவிளை அருகே  இரையுமன்துறையில் குமரி எம்பி விஜய்வசந்த் ஆய்வு மீனவமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இரயுமன்துறை-தேங்காய்பட்டணம் இடையே இணைப்பு பாலம் அமைக்க கோரிக்கை வைத்தனர்.



கன்னியாகுமரி மாவட்டம் இரயுமன்துறை கடற்கரை கிராமத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் ஆய்வு மேற்கொண்டார்.

👮உறைய வைக்கும் Police Commemoration Day- வில் வீரவணக்கம் பாடல்...

அதை தொடர்ந்து மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார் இதில் கடல் சீற்றத்திலிருந்து , வீடுகளில் கடல் தண்ணீர் புகாமல் இருக்க 250 மீட்டர் தூண்டில் வளைவு அமைக்கவும் அப்பகுதியிலுள்ள ஆற்றின் கரையில் தடுப்புசுவர் அமைத்து தேங்காய்பட்டணம் துறைமுகத்திற்கு இணைப்பு சாலை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர். 

இந்த ஆய்வின்போது மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தாரகை கத்பட், மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் ஆமோஸ், கிழக்கு மாவட்ட துணை தலைவர் மகேஷ்லாசர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரத்தினகுமார், இளைஞர் காங்கிரஸ்  மேற்கு மாவட்ட தலைவர் திபாகர், மேற்கு மாவட்ட ஓ. பி. சி பிரிவு மாவட்ட தலைவர் ஸ்டுவர்ட், வட்டார தலைவர் கிறிஸ்டோபர், மரியதாசன், பங்கு தந்தை ரெஜீஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments