மாற்றம் என்பது இந்த உள்ளாட்சியில் இருந்து தொடங்கட்டும்.. அன்புமணி ராமதாஸ் உத்வேக பேச்சு
காஞ்சிபுரம்
மாற்றம் என்பது இந்த உள்ளாட்சியில் இருந்து தொடங்கட்டும். இந்த வெற்றி பாட்டாளி மக்கள் கட்சியின் ஆட்சிக்கான வெற்றி.
அதிமுக ஆட்சி அமைக்கும் என்பதற்காகவும், திமுக ஆட்சி என்பதற்காகவும், உருவாக்கப்படவில்லை... பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என உருவாக்கப்பட்ட கட்சி என்று காஞ்சிபுரத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடுகின்றது.
பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் ஒன்றியக்குழு கவுன்சிலர்கள் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் காஞ்சிபுரம் அடுத்த அவலூர் கிராமத்தில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.
தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது,
சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றுவதால் எதுவும் ஆகபோவதில்லை அது வெறும் காகித பேப்பர் தான்.... ஆனால் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றினால் நிச்சயம் நிறைவேற்றியாக வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுகின்றது. பாமக கட்சி அதிமுக ஆட்சி அமைக்கும் என்பதற்காகவும், திமுக ஆட்சி என்பதற்காகவும், உருவாக்கப்படவில்லை. பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என உருவாக்கப்பட்ட கட்சி. அதற்கான நேரம் தான் இது. அனைவரும் ஆட்சிக்கு வந்துவிட்டனர்.
அதிமுக ஆட்சிக்கு வந்துவிட்டது... பல ஆண்டுகளாக உழைத்த ஸ்டாலின் அவர்களும் ஆட்சிக்கு வந்துவிட்டார்.. ஸ்டாலினின் ஆசை நிறைவேறியது.
அடுத்து ஆட்சி பாமக ஆட்சி தான் அதற்கான முன்னோட்டம் தான் இந்த தேர்தல். 10.5 சதவீத இட ஒதுக்கீடு, ஜாதி பிரச்சனையோ, ஓட்டு பிரச்சனையோ, அரசியல் பிரச்சினையும் இல்லை, இது சமூக நீதி பிரச்சனை.
அதிமுக ஒரு சட்டம் கொண்டு வந்தால் திமுக எதிர்க்கும், திமுக ஒரு சட்டம் கொண்டு வந்தால் அதிமுக எதிர்க்கும், ஆனால் இந்த சட்டத்திற்கு இரு கட்சி ஏற்று அமல்படுத்துவதற்கு காரணம் மருத்துவர் ராமதாஸ்.
மாற்றம் என்பது இந்த உள்ளாட்சியில் இருந்து தொடங்கட்டும். இந்த வெற்றி பாட்டாளி மக்கள் கட்சியின் ஆட்சிக்கான வெற்றி.
54 ஆண்டுகளாக திமுக, அதிமுக மாற்றி மாற்றி ஆட்சி அமைத்தது போதும் என மணி ராமதாஸ் கேட்டுக் கொண்டார்.
மேலும் கொரோனா நோய் தொற்று காலம் என்பதால் கட்சி, அரசியல், தேர்தல், எல்லாவற்றையும் விட உங்கள் உயிர் முக்கியம், அனைவரும் முக கவசம் அணிய வேண்டும், அனைவரும் தடுப்பூசி செய்துக் கொள்ளவேண்டும், என அன்புமணி ராமதாஸ் கிராம மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
No comments
Thank you for your comments