கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்தமாணவ, மாணவியர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தகவல் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு,அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் (பி.சி, எம்.பி.சி, டி.என்.சி) வகுப்பைச் சார்ந்த மாணவ/மாணவியர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்டஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
அரசு, அரசுஉதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் (பி.சி,எம்.பி.சி, டி.என்.சி) வகுப்பைச் சார்ந்த மாணவ/மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கிவருகிறது.
அரசு மற்றும் அரசுஉதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ/மாணவியருக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிறபடிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000/&க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
உதவித்தொகைக்கான கல்வி உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கும் மாணவ/மாணவியர்கள் விண்ணப்பபடிவங்களை பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று புதுப்பித்தல் இனங்கள் & 05.10.2021க்குள்ளும், புதியது இனங்களுக்கு 05.11.2021க்குள்ளும் பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்கள் தங்களின் வங்கி கணக்கு எண் விவரங்களை தவறாது குறிப்பிடவேண்டும்.
சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் 15.10.2021ஆம் தேதியில் துவங்கும் கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (Scholarship Portal) புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை 14.11.2021 ஆம் தேதிக்கு முன்பும், 16.11.2021&ம் தேதியில் துவங்கும் புதியதிற்கான விண்ணப்பங்களை 31.12.2021 ஆம் தேதிக்கு முன்பும் அந்தந்த கல்வி நிறுவனங்கள் இணையதளம் மூலம் கேட்புகளை சமர்பிக்கவேண்டும்
அரசு இணையதளம் www.tn.gov.in/bcmbcdept-யிலும் இத்திட்டங்கள் குறித்தவிவரங்கள் மற்றும் விண்ணப்பபடிவங்கள் உள்ளது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை - அதிகாரப்பூர்வ இணையளதம்
No comments
Thank you for your comments