Breaking News

சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து வாக்குப்பதிவு

காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு 6வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் படப்பை ஆ.மனோகரன் மற்றும் குன்றத்தூர் ஒன்றிய 18வது வார்டு உறுப்பினர் திமுக வேட்பாளர் சரஸ்வதி மனோகரன்  தனது குடும்பத்துடன்  பொதுமக்களுடன் வரிசையாக நின்று ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

கடந்த 6ம் தேதி தமிழகத்தில் விடுப்பட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலானது முதல் கட்டம் நிறைவடைந்து இன்று (09.10.2021) இரண்டாம் கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதாவது குன்றத்தூர்,ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு  வாக்குப்பதிவு சரியாக 7 மணியளவில் துவங்கியது.

காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு 6வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் படப்பை ஆ.மனோகரன் மற்றும் குன்றத்தூர் ஒன்றிய 18வது வார்டு உறுப்பினர் திமுக வேட்பாளர் சரஸ்வதி மனோகரன் அவர்கள்  குன்றத்தூர்  ஒன்றியத்துக்குட்பட்ட படப்பை கிராம பஞ்சாயத்து சேவை மையத்தில் பொதுக்களுடன்  வரிசையாக நின்று ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

சமூக இடைவெளியுடனும் முகக்கவசம் அணிவித்தும் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவு நடைபெறும் மையங்களிலிருந்து 100 மீட்டர் இடைவெளிக்கு எந்த வாகனங்களையும் போலீசார் அனுமதியளிக்காமல் ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்கு மையங்களில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க அவர்களுக்கு  வாகனம் ஏற்பாடு செய்துள்ளனர்.பொதுமக்கள் ஆர்வத்துடன் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் வரிசையாக நின்று வாக்களித்து வருகின்றனர்.

No comments

Thank you for your comments