Breaking News

திமுக சார்பில் ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் வாக்குப்பதிவு

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தமிழ்அமுதன் தனது ஓட்டை ஆதனூர் டி.டி.சி., நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கம் பள்ளியில் பதிவு செய்தார். 


இவருடன் இவரது மனைவி மலர்விழி தமிழ்அமுதனும் வந்து ஓட்டு போட்டனர். மலர் விழி தமிழ்அமுதன் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய  கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார். 

ஆதனூர் டி.டி.சி., நகரை சேர்ந்த சில வாலிபர்கள் ஓட்டுப் போட்டு விட்டு, வேட்பாளர் தமிழ் அமுதனுக்கு உச்சாகமாக வாழ்த்தும் தெரிவித்தனர். இந்த பூத்தில் வயதான மூதாட்டிகள் காலையிலேயே வந்து தங்களது ஓட்டை பதிவு செய்தனர்.

No comments

Thank you for your comments