ஆதிபரசக்தி சக்தி பீடம் அமைய கூட்டு வழிபாடு
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாமல்லநகர் பகுதியில் ஆதிபரசக்தி சக்தி பீடம் அமைய கூட்டு வழிபாடு நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாமல்லன் நகர் அருகே அமைந்துள்ள சத்யா நகரில் ஆதிபராசக்தி சக்தி பீடம் அமைந்திட மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட அருள்திரு அடிகளாரின் ஆணைக்கிணங்க ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 10 மணிக்கு மாவட்டத் தலைவர் கொண்டா ரெட்டியார் தலைமையில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் நடைபெற்ற கூட்டுப்பிரார்த்தனைக்கு முன்னதாக ரயில்வே சாலையில் இருந்து அடிகளாரின் திருவுருவப் படத்தை ஊர்வலமாக மேல தளங்களுடன் கொண்டு சென்று சத்யா நகர் பகுதியில் அமைத்து சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.
இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சக்தி கமலாம்பாள், வட்ட தலைவர்கள் சக்தி சுந்தரமூர்த்தி சக்தி கங்காதரன் சக்தி கண்ணன் மாவட்ட பொறுப்பாளர்கள் சக்தி சக்தி மன்மதன் சக்தி தேவேந்திரன் சக்தி கன்னியப்பன் மகளிரணி பிரேமா பிரச்சார குழு தலைவர் கமலக்கண்ணன் தணிக்கைக்குழு பத்மநாபன் உள்ளிட்ட ஏராளமான செவ்வாடை பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி சிறப்பாக செய்திருந்தார். கலந்துகொண்ட அனைவருக்கும் அடிகளாரின் அருளாசியுடன் அன்னதானமும் வழங்கப்பட்டது.
No comments
Thank you for your comments