காவல் நிலையத்தில் டிஜிபி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார்...
தமிழக டிஜிபியாக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தாலுகா காவல் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு திடீரென வந்து ஆய்வு மேற்கொண்டர்.
பின்னர் கைதிகள் அறைகள் தூய்மையாக உள்ளதா, வழக்கு சம்பந்தமான புத்தகங்கள் சரியாக உள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார்.
முன்னதாக, காவல் நிலையத்தை ஆய்வு செய்ய வந்த டிஜிபி சைலேந்திரபாபுக்கு திருவள்ளூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜேசுராஜ், மற்றும் மீனாட்சி துணை கண்காணிப்பாளர், பாஸ்கரன், சந்திரதாசன் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றனர்.
பின்னர் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு சிறிது நேரம் கலந்துரையாடி பின்னர் குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி தொடர்ந்து தமது சைக்கிள் பயணத்தை மேற்கொண்டர்.
இதில் ஆய்வாளர்கள் நாகலிங்கம், ரவிக்குமார் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் பங்கேற்றனர்.
No comments
Thank you for your comments