ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் அனுசரிப்பு
காஞ்சிபுரம்:
அக்டோபர் - 27 முதல் நவம்பர் 02 வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக இந்தியா முழுவதும் கடைபிடிக்கப் படுவதையொட்டி, காஞ்சிபுரம் பஞ்சுப் பேட்டையில் உள்ள வேளாண்மைத்துறை அலுவலக வளாகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு காணொலி காட்சி மூலம் ஏற்படுத்தப்பட்டது.
இதில் உறுதிமொழியாக, நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக நான் நம்புகிறேன். அரசு, குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை ஊழலை ஒழிக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நம்புகிறேன்.
நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு, நேர்மை மற்றும் கண்ணியம் ஆகியவற்றுடன் ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும்.
நான் அனைத்து செயல்களிலும் நேர்மையையும், சட்ட விதிகளையும் பின்பற்றுவேன் என்றும், இலஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன் என்றும், அனைத்து செயல்களையும் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்துவேன் என்றும், பொது மக்களின் நலனுக்காகப் பணியாற்றுவேன் என்றும், தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை வெளிப்படுத்துவதில் ஒரு முன்னுதாரணமாகச் செயல்படுவேன் என்றும், ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகார அமைப்பிற்குத் தெரியப்படுத்துவேன் என்ற உறுதிமொழியை அனைத்து அரசு அலுவலர்களும் ஏற்கும் வகையில் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்த கேட்டுக்கொள்ளப்பட்டது
இந்த காணொளி நிகழ்சியில் காஞ்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை டிஎஸ்பி கலைச்செல்வன் உள்ளிட்ட துறை அலுவலர்கள் மற்றும் தோட்டக்கலை துறை இயக்குனர் கோல்டன் பிரேமாவதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments