Breaking News

தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

 திருப்பூர்: 

தமிழ்நாடு கிராம ஊராட்சி குடிநீர் மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள், தூய்மைப் பணியாளர்கள், மற்றும் தூய்மை காவலர்கள் சங்கம் சார்பில், இன்று மாலை 3.30 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  மாநிலம் தழுவிய மாவட்ட தலைநகர் ஆர்ப்பாட்டம்.

மேல்நிலைத் தொட்டி இயக்குனர்களுக்கு 1400 ரூபாய் வழங்கும் ஊதியத்துடன் கூடுதலாக பணிக்கொடை ஓய்வூதியம் வழங்க வேண்டும் சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 

🔥பொருளாதாரம் - அரசு திட்டங்கள்  நிலை என்ன? 👆🔔👍

தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க உத்தரவிட்டும் இன்னும் அமல்படுத்தவில்லை தகுதிக்கேற்ப பதவி உயர்வு பணிக்காலத்தில் இறந்தவர்களின் வாரிசுக்கு வேலை குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். 

தூய்மை காவலர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோட்பாடு முற்றிலுமாக இவர்கள் விஷயத்தில் கடைபிடிக்கவில்லை பேரூராட்சி நகராட்சியில் தினக்கூலி பட்டியலின்படி மாதம் பத்தாயிரம் வழங்கப்படுகிறது, ஊராட்சி ஒன்றியங்களில் இவர்கள் பணிக்கு எடுக்கும்போது MGNREGS ஊதியம் வழங்கப்படும் என அரசு தெரிவித்தது.

ஆனால் எந்த ஊதியம் வழங்காமல் மிகக்குறைந்த ஊதியமாக ரூபாய் 3,600 வழங்கப்படுகிறது.

எனவே குறைந்தபட்ச ஊதியமாக MGNREGS ஊதிய கணக்கீட்டின்படி மாத ஊதியமாக ரூபாய் 7,100 வழங்க வேண்டும். அதுவும் நேரடியில் ஊராட்சியில் வழங்க வேண்டும் PF பிடிப்பதற்கான கணக்கு தொடங்க வேண்டும் என கோரிக்கைகளை முன் வைத்தனர்.

தமிழக முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு இருக்கும் மற்றும் துறை இயக்குனர் கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களுக்கு பல முறை மனு அனுப்பப்பட்டுள்ளது... பலமுறை அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அந்தந்த மாவட்ட ஊழியர்கள் மூலம் மனு கொடுக்கப்பட்டுள்ளது... இறுதியாக மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாக 27.8.2021 அன்று அரசுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

No comments

Thank you for your comments