Breaking News

எஸ்.கே.எம்., நிறுவனத்துக்கு சொந்தமான 11 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

ஈரோடு:

ஈரோடு தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எஸ் கே எம் அணிமல் ஃபீட்ஸ் அண்ட் புட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற  தனியார் நிறுவனத்தில் 11 க்கும் மேற்பட்ட இடங்களில்  தற்போது  வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் ...

1981ல்  சிறிய அளவில் முட்டை பண்ணையாக தொழில் துவங்கிய இந்த நிறுவனமானது, படிப்படியாக வளர்ச்சியடைந்து முட்டை உற்பத்தி, மாட்டுத்தீவனம், முட்டை பவுடர் ஏற்றுமதி, சித்த மருத்துவ உற்பத்தி போன்ற உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. 

இந்நிலையில் எஸ்.கே.எம் நிறுவனத்துக்கு சொந்தமான 11 க்கும் மேற்பட்ட இடங்களில் சென்னையிலிருந்து சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி ஈரோடு சோலார் பகுதியிலுள்ள எஸ்.கே.எம் அணிமல் ஃபீட்ஸ் & ஃபுட்ஸ் என்ற தலைமை அலுவலகம் உட்பட ஈரோடு காளைமாடு சிலை அருகே உள்ள எஸ் கே எம் சித்த மருத்துவமனை மற்றும் விற்பனையகம், சோளங்கபாளையத்தில் உள்ள முட்டை உற்பத்தி தொழிற்சாலை அலுவலகம், நஞ்சை ஊத்துக்குளியில்  உள்ள கால்நடை தீவன தொழிற்சாலை அலுவலகம், நிறுவனத்தின் உரிமையாளர்களான எஸ் கே எம் மயிலானந்தன், சிவக்குமார், சந்திரசேகரன் ஆகியோருக்கு சொந்தமான பெரியார் நகரில் உள்ள வீடு, மோளகவுண்டம்பாளையத்தில் உள்ள வீடு உள்ளிட்ட 11 இடங்களில், 11 குழுக்களாக பிரிந்து வருமான வரித்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்நிறுவனத்திற்கு சொந்தமான  தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 

🔥பொருளாதாரம் - அரசு திட்டங்கள்  நிலை என்ன? 👆🔔👍

இந்த ஆய்வானது பல கோடி ரூபாய் வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டதா? என்பது குறித்து தற்போது நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த நிறுவனத்தின் உற்பத்தி பொருட்கள் தமிழகம் கேரளா ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், சோழங்க பாளையத்தில் உற்பத்தி செய்யப்படும் முட்டை பவுடர் 20க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

No comments

Thank you for your comments