குப்பைக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு! நோய் தொற்று பரவும் அபாயம்!!
திருப்பூர், அக்.27-
திருப்பூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் குள்ளி செட்டியார் வீதியில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. தொற்று பரவும் அபாயத்தால் பொதுமக்கள் அச்சத்துடன் அச்சாலையை கடக்கின்றனர்.
தீபாவளி பண்டிகை வருவதற்கு சில நாட்களே உள்ளது. குப்பை குவியலாக இருக்கும் இந்த வழியில்தான் பொதுமக்கள் அனைவரும் நகைக்கடை மற்றும் ஜவுளி கடை பாத்திர கடைகளுக்கு செல்வார்கள்...
சாக்கடை கால்வாயில் குப்பை கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டு சாக்கடை கால்வாய் கழிவுநீர் சாலையிலே செல்கிறது... கால்வாயில் செல்ல வேண்டிய கழிவு நீர் சாலையில் செல்வதால் சாலை செல்பவர்கள் எவ்வாறு செல்வது... என்று மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
குப்பபைகளை அகற்றாமல் தேங்குவதால் துற்நாற்றம் வீசுகிறது... இதனால் அச்சாலை வழியாக செல்பவர்கள் மூக்கை மூடிகொண்டுதான் செல்லவேண்டும்.. வாகன ஓட்டிகள் ஈக்களால் பூச்சிகளால் மிகவும் சிரமித்திற்கு உள்ளாகின்றனர்.
தீபாவளி பண்டிகைக்கு சந்தோஷமாக ஆடை ஆபரணங்கள் வாங்க வருபவர்கள் முகசுளிப்போடு செல்கின்றனர்... மழைக்காலம் என்பதால் குப்பைகள் மழைநீரில் கலந்து சாலை முழுவதும் பரவிவிடுகின்றன...
ஆகையால் மாநகராட்சி அதிகாரி உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அங்குள்ள பொதுமக்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செவி சாய்க்குமா மாநகராட்சி... உடனடி எடுக்கை எடுப்பார்களா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
No comments
Thank you for your comments