விவசாய நலன் காக்கும் குறைதீர் கூட்டம்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாய நலன் காக்கும் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் நலன் காக்கும் குறைதீர் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன அவற்றை மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா. ஆர்த்தி அவர்கள் தலைமை ஏற்று விவசாயிகள் கூறும் குறைகளுக்கு அரசு அலுவலர்கள் மூலம் உதவி புரிவதாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இவற்றில் விவசாயிகளுக்கு பாலாற்றில் குறுக்கே தடுப்பணைகள் அமைக்கப்பட்டு நீர்த்தேக்கம் உள்ள போதும் கால்வாய் வழியாக ஏரிகளுக்கு நீர் வரவில்லை என்ற குற்றச்சாட்டும் பழையசீவரம், சாலவாக்கம் செல்லும் பாலாற்றின் குறுக்கே உள்ள மேம்பாலம் 3 கட்டைகள் இடிந்து விழுந்த நிலையில் பாலம் பழுது அடைந்து காணப்படுவதாக சரி செய்து தருமாறும் கல்குவாரிகள் நிறுத்தப்பட்டதை மேலும் காலம் நீடித்து தருமாறும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
பின்பு பாலாற்றின் துணை நதியான வேகவதி ஆற்றில் தாமல் ஏரியின் மூன்றாவது மதகில் இருந்து திறந்துவிடப்படும் நீர் செல்வது வழக்கம் சில மணல் மாபியாக்கள் ஏரி நிரம்பியும் கால்வாயை திறக்க விடாமல் தடுத்தும் வேகவதி ஆற்றை காஞ்சிபுரத்தின் கூவம் ஆறாக மாற்றி விட்டதாக விவசாயிகள் குறை கூறினர் இவற்றால் பட்டு நெசவுதொழில் நலிவடைந்ததிற்கும் நிலத்தடி நீர் மாசு அடைந்ததிற்கும் காரணம் வேகவதி ஆற்றில் ஆற்றுநீர் செல்லாதது என மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துரைத்தனர்.
நெல் கொள்முதல் உத்தரமேரூர், வாலாஜாபாத் பகுதியிலுள்ள விவசாயிகள் 9ம் மாதம் டோக்கன் பெற்று இன்று வரையில் நெல் கொள்முதல் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் கூறினார். பின்பு விவசாய நிலங்களை காட்டுப்பன்றிகள் சேதம் செய்வதை பன்றிகளை கொள்ளவும் அல்லது வனத்துறை மூலம் துப்பாக்கியால் சுடவும் அனுமதி வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இவற்றுக்கெல்லாம் மாவட்ட ஆட்சியர் தகுந்த அரசு அலுவலர்களுடன் நேரடியாக எடுத்துக் கூறி உடனடியாக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு உத்தரவிட்டார்.
உத்திரமேரூர் தொகுதிக்குட்பட்ட நீர்குன்றம், மாமண்டூர், ஆதம்பாக்கம் போன்ற இடங்களில் மலை சார்ந்தது இடங்களாக உள்ளதால் அங்கு புதியதாக கல்குவாரிகள் உருவாக்க அனுமதி அளிக்க கூடாது என்றும் இவற்றால் விவசாயம் பாதிக்கும் எனவும் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர்.
இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் இரா. பன்னீர்செல்வம், வேளாண் இணை இயக்குனர் கோல்டி பிரேமாவதி, மாவட்ட வன அலுவலர் சத்தியமூர்த்தி, மாவட்ட ஆட்சியரின் வேளாண்மை நேர்முக உதவியாளர் கணேசன், முன்னோடி வங்கி மேலாளர் சண்முகராஜா மற்றும் விவசாய பெருமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments