பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்
தருமபுரி
மத்திய அரசு தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திரா மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட பிரிவு இணைந்து தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் இன்று அதியமான்கோட்டை சென்றாயப்பெருமாள் திருக்கோயில் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து அதனை இன்று அப்புறப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியை தருமபுரி மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
நேரு யுவகேந்திரா கணக்கு மற்றும் திட்ட மேற்பார்வையாளர் திரு ஜி வேல்முருகன், தர்மபுரி மாவட்ட தொல்லியல் துறை அலுவலர் திரு.திருவேங்கட குரு பிரசன்னா, ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி தாளாளர் திரு. கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் அசோக் குமார், நல்லம்பள்ளி ஒன்றிய சேர்மன் மகேஸ்வரி பெரியசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் திரு.முருகன், திரு.காமராஜ், திரு.பிரேம்குமார், திரு.சண்முகம் நேரு யுவகேந்திரா அவை சார்ந்த ஹரி பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் மற்றும் நேரு யுவகேந்திரா சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் தூய்மைப் பணியை மேற்கொண்டனர்.
No comments
Thank you for your comments