ஊர்க்காவல் படையில் பணிபுரிய வாய்ப்பு
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் மண்டல தளபதி மற்றும் மண்டல துணை தளபதி பதிவுகளுக்கு பணி நியமனம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து எஸ்.பி.சேசாங் சாய் அறிக்கையில், திருப்பூர் மாவட்ட போலீசாருக்கு உதவியாக ஊர்க்காவல் படையில் தன்னார்வமாக கோவில் மற்றும் இதர பாதுகாப்பு பணியில் தங்களுடைய ஓய்வு நேரத்தில் சேவை செய்ய தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 20 முதல் 45 வயதுக்குள்ளானவர்கள் உடல் தகுதி உடைய ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

No comments
Thank you for your comments