ரோட்டரி சங்கம் சார்பாக 365 நாட்கள் அன்னதானம் வழங்கல்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் கிழக்கு ரோட்டரி சங்கம் சார்பாக 365 நாட்கள் அன்னதானம் வழங்கும் நிகழ்வு இன்று காஞ்சிபுரத்தில் நூறாவது நாள் 200 நபர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
அதில் ஒரு பகுதியாக 365 நாட்களும் உணவின்றி தவிக்கும் ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அதில் ஒரு பகுதியாக இன்று 100 வது நாளான அன்று 200 நபர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் ஆலயம் அருகில் நடத்தினார்கள். இந்நிகழ்வில் காஞ்சிபுரம் பெருநகராட்சி ஆணையர் லக்ஷ்மி அவர்கள் கலந்துகொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் இச்சங்கத்தின் தலைவர் முருகேஷ் செயலாளர் கமலேஷ் பொருளாளர் பாஸ்கரன் மற்றும் ரகுநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர் இவ்வாறான நிகழ்ச்சியை காஞ்சிபுரம் பொதுமக்களும் ஆணையரும் வெகுவாக பாராட்டினர்.




No comments
Thank you for your comments