Breaking News

போலி சான்றிதழ் மூலம் பணியமர்த்திய விவகாரம்: திருவள்ளுவர் பல்கலை., முன்னாள் பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

வேலூர், அக்.8-

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக பணியாற்றிய அசோகன் என்பவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று அதிரடி ஆய்வு நடத்தினர். 

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காடு பகுதியில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது இந்த பல்கலைக்கழகத்தில் கடந்த 2012-2016 கல்வி ஆண்டுகளில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவல ராக பணியாற்றியவர் அசோகன்.இவர் தற்போது ஓய்வு பெற்று விட்டார். 

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பதிவாளராகவும், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராகவும் பணிபுரிந்த அசோகன், கடந்த 2015-ம் ஆண்டு, போலி ஆவணங்களைத் தயாரித்து, 6 பேரை பல்கலைக் கழக ஊழியர்களாகப் பணியமர்த்தியதாகக் கூறப்படுகிறது.

புகார் மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அசோகன் மற்றும் அவரால் பணியமர்த்தப்பட்ட ஆனந்தபாபு, எழிலரசி, ஜெயந்தி, விஜயகிருஷ்ணன், தசரதன், அன்பரசன் ஆகிய 7 பேர்மீது வேலூர் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், காட்பாடி வி.ஜி.ராவ் நகரில் உள்ள அசோகன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதேபோல, திருவாரூர் மாவட்டம் மேல எருகாட்டூரில் உள்ள அசோகனின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

இவர் பணியாற்றிய காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்து வைத்திருந்தார். இது குறித்த புகார் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு சென்றது.

தனது பணி காலத்தின்போது சில அரசியல்வாதிகளின் துணையோடு இப்படி ஆட்டம் போட்டு அளவில்லா சொத்துக்களை வாரி  குவித்த அசோகன்,  இவரது பணி காலத்தின்போது 65 பணியாளர்களை எவ்வித முன்னறிவிப்பும்  இன்றி பணி நீக்கம் செய்தார்.

இதையடுத்து அந்த 65 பேரும் தொழிலாளர் நல நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

இதற்கிடையே இவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் மேல எருக்காட்டூர் பகுதியில் அசையா சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதும் தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. 

நேற்று காலை முதல் காட்பாடி விஜி ராவ் நகரில் உள்ள அவரது வீடு மற்றும் திருவாரூர் மாவட்டம் மேல் எருக்காட்டூர் பகுதியில் உள்ள வீடு ஆகிய பகுதிகளில் நேற்று காலை தொடங்கிய அதிரடி ஆய்வு பிற்பகல் 3 மணிவரை நடந்தது. 

இதில் சில முக்கிய ஆவணங்கள் அவர் வாங்கிக் குவித்த சொத்துக்களுக்கு உண்டான ஆவணங்களும் சிக்கின. 

இது அவரது பணிக்காலத்தின் போது சக ஊழியர்களுக்கு இழைத்த அநீதிக்கும் மற்றும் 65 பேரின் கண்ணீருக்கும் அவர்களது குடும்பத்தாரின் சாபமும் அசோகனின் வாழ்க்கையை இப்போது திருப்பிப்போட்டு உள்ளது என்கின்றனர் பாதித்தவர்கள்...

வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர்கள் ரஜினிகாந்த், விஜய் மற்றும் விஜயலட்சுமி உள்ளிட்ட போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். 

இந்த சோதனை வேலூர் மாவட்டம் மட்டுமல்லாது பிற மாவட்டங்களிலும் பணி ஓய்வு பெற்ற அவரது வீட்டில் சோதனை நடந்துள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விரைவில் அசோகன் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று இவரால் பாதிக்கப்பட்ட 65 பேரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழக அரசும், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் அசோகன் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கையை பாரபட்சமின்றி எடுக்க வேண்டுமென்று அசோகனா ல் பாதிக்கப்பட்ட 65 பணியாளர்களும் எதிர்பார்க்கின்றனர்.

No comments

Thank you for your comments