Breaking News

குடிபோதையில் நண்பர்கள் மோதல் ... வாலிபர் வெட்டிப் படுகொலை

கன்னியாகுமரி  

கருங்கல் காவல்நிலையம் அருகே குடிபோதையில் நண்பர்கள் இருவர் மோதல்  ஏற்பட்டு வாலிபர் வெட்டிக்கொலை. கொலையாளியை கைது செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை. 

அருள்செல்வன்

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே துண்டத்துவிளை பகுதியை சேர்ந்தவர் கூலிதொழிலாளியான 34வயதான விஜய். இவரும் கருப்பன் குடியிருப்பு விளாகம் பகுதியை சேர்ந்த கூழிதொழிலாளியான 41வயதான அருள்செல்வன் என்பவரும் குடிபழக்க நண்பராவர்.

விஜய்

இருவருக்குமே திருமணமாகவில்லை இந்நிலையில் மாலை இருங்கல் காவல் நிலையும் அருகே நண்பர் இருவரும் மதுபோதையில் இருந்தபோது ஒருவரை ஒருவர் தாக்கிபேசியதாக கூறபடுகிறது. இந்நிலையில் போதை தலைகேறியிருந்த அருள்செல்வன் அருகிலிருந்த இறச்சிகடைக்குள் சென்று அங்கிருந்த இறச்சிவெட்டும் கத்தியை எடுத்து விஜய்யின் தலையில் வெட்டியுள்ளார். 

இதனால் பலத்த காயமடைந்த விஜயை அப்பகுதியினர் மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவகல்லூரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விஜய் உயிரிழந்தார். இதனையடுத்து விஜய்யை கொலை செய்ததற்காக அருள்செல்வனை கைது செய்த கருங்கல் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.காவல்நிலையில் அருகிலேயே குடிபோதையில் வாலிபர் வெட்டிகொல்லபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

👮உறைய வைக்கும் Police Commemoration Day- வில் வீரவணக்கம் பாடல்...

No comments

Thank you for your comments