Breaking News

தினமணி நிருபர் கோபியின் உடலுக்கும் அமைச்சர்கள் நேரில் அஞ்சலி

தினமணி நிருபர்  E. கோபி, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே வாகன விபத்தில் சிக்கி எதிர்பாராதவிதமாக தன்னுயிர் நீத்தார்..  


இந்நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் தினமணி நிருபர் கோபியின் உடலுக்கு அமைச்சர் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், செய்தியாளர்கள், பலர் இறுதி அஞ்சலி.

நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், சக செய்தியாளர்கள் அனைவருக்கும் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், அவரது குடும்பத்திற்கு என்றும் உறுதுணையாக இருக்கும் என்றும் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார்  இரங்கல் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்  திரு. E. கோபியை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் பத்திரிகையாளர்களின் நலனில் அக்கறை கொண்டவர்,  செய்தியாளர்  திரு. E. கோபியின் பணியை போற்றும் விதமாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். 

மேலும் வருவாய் ஈட்டும் நபரை இழந்து வாடும், இரண்டு சிறு குழந்தைகளை வளர்க்கும் கடமைகளை சுமந்து வாழ்வறியாது நிற்கும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று  நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுக்கிறது.  இவ்வாறு  நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments