14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவன் போக்சோவில் கைது
திருவள்ளூர், அக்.8-
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் அடுத்த திருநின்றவூரை சேர்ந்த விக்ரம் வயது 20 திருநின்ற ஊரில் ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவரது அத்தை மகள் 16 வயது சிறுமி. இவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
வீட்டீல் யாரும் இல்லாத நேரத்தில் தனிமையில் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. உடல் நலக்குறைவு காரணமாக விக்ரம் வீட்டில் தங்கியுள்ளார். அப்போது இவர்கள் தனிமையில் உல்லாசமாக இருந்ததை அறிந்த இவர்களது பெற்றோர்கள் சிறுமியை அழைத்துக் கொண்டு கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பு சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் சிறுமியை இவர் பெற்றோர் அழைத்துக் கொண்டு கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளன சிறுமி கர்ப்பமாக இருப்பதை அறிந்த மருத்துவர் உடனடியாக ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து ஆவடி காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார் சிறுமியை அழைத்து விசாரணை நடத்தினர் அப்போது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்ததை அறிந்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் விக்ரமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

No comments
Thank you for your comments