நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு தசசண்டி மஹாயாகம்
காஞ்சிபுரம்
நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் ஆதி பீட பரமேஸ்வரி காளிகாம்பாள் திருக்கோயில் தசசண்டி மஹாயாகம் நடைபெற்றது.
கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் அருகே ஆதி காமாட்சி கோவில் என அழைக்கப்படும் ஆதி பீட பரமேஸ்வரி காளிகாம்பாள் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் நவராத்திரி உற்சவம் நடைபெற்று வருகிறது.
நவராத்திரி உற்சவத்தின் 5ம் நாளான இன்று ஆதி காமாட்சி என அழைக்கப்படும் காளிகாம்பாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மகா யாக குண்டத்தில் இன்று தச சண்டி மஹா யாகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
உலக மக்களை அச்சுறுத்திய கொடிய அரக்கர்களை போரிட்டு அழித்ததைப் போல, தற்போது தலைவிரித்தாடும் கொரோனா எனும் கொடிய அரக்கனை அழித்து உலக மக்களை காத்திட வேண்டியும், உலக மக்களின் நன்மை வேண்டியும் ஆதி பீட பரமேஸ்வரி காளிகாம்பாள் அம்மனை வேண்டி தச சண்டி மஹாயாகம் நடைபெற்றது.
தச சண்டி மஹா யாகத்தை முன்னிட்டு 1 சிறுமி மற்றும் 13 சுமங்கலி பெண்களை அம்மனாக பாவித்து அமர வைத்து அவர்களுக்கு பூஜை செய்தனர்.
சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க பட்டுப்புடவை, மலர்மாலைகள், மற்றும் 1008 வகையான ஹோம திரவியங்கள் உள்ளிட்டவற்றை கொழுந்துவிட்டு எரிந்த,யாக குண்டத்தில் இட்டு தச சண்டி யாகம் நடைபெற்றது.
தச சண்டி யாகத்தை முன்னிட்டு கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளின்படி குறைந்த அளவு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு காளிகாம்பாள் அம்மனை தரிசனம் செய்து விட்டு சென்றனர்.






No comments
Thank you for your comments