Breaking News

வேலூரில் வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரித்தனர்...


வேலூர் மாவட்டம் காட்பாடி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 55 புதூர் மற்றும் லட்சுமிபுரம் சேர்க்காடு ஒன்றியம் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் தனலட்சுமி பழனி அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து தேர்தல் பொறுப்பாளர் 5 வது வட்ட திமுக விநாயகம் அவர்கள் தேர்தல் நடத்தப்படும் வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்குகள் சரியான முறையில் நடைபெறுகிறதா என்று பொதுமக்கள் வாக்களிக்கிறார்கள் என்று நேரில் சென்று  பார்வையிட்டனர் மற்றும் கழக உறுப்பினர்கள் உடன் இருந்தனர்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியம் பொய்கை ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் கலைச்செல்வி தினகரன் தண்ணீர் குழாய் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் உங்கள் பொன்னான வாக்குகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சமூக ஆர்வலர் மகா தினகரன் மற்றும் ராதா வழக்கறிஞர் சங்கரி பன்பரசன் சாருமதி யோகானந்தம் மற்றும் சமூக ஆர்வலரும் எழுத்தாளருமான சிந்து சீனு பல சமூக ஆர்வலர்கள் தன்னார்வலர்கள்  சிறுவர்கள் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஓட்டு கேட்டனர்.


No comments

Thank you for your comments