அருட்பெருஞ் ஜோதி வழிபாடு நிலைய ராமலிங்க சுவாமிகள் மடத்தின் திருப்பணிக்கு நிதி உதவி
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டம், கிடாரங்கொண்டான் ஊராட்சி, நடராஜப் பிள்ளை சாவடியில் அமைந்துள்ள வள்ளலார் அருளிய அருட்பெருஞ் ஜோதி வழிபாடு நிலைய ராமலிங்க சுவாமிகள் மடத்தின் திருப்பணிக்கு மயிலாடுதுறை இந்தியன் வங்கி ஊழியர்கள் மற்றும் ஜோதி பவுண்டேஷன் சார்பில் சன்மார்க்க பொறுப்பாளர் அல்மா சரவணன் அவர்களிடம் நிதி உதவி வழங்கப்பட்டது.
இவ்விழாவில், ஜோதி பவுண்டேஷன் அறக்கட்டளை நிறுவனர் ஜோதி ராஜன், இந்தியன் வங்கி ஊழியர்கள், பக்கிரிசாமி மற்றும் வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


No comments
Thank you for your comments