தமிழகம் முழுவதும் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் அஸ்தி பயணம்... பொதுமக்கள் அஞ்சலி...
காஞ்சிபுரம்:
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்றனர்.
அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் இறந்தனர். இதையடுத்து நடந்த வன்முறையில் பத்திரிகையாளர் உட்பட 5- பேர் உயிரிழந்தனர்.
உத்திரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கார் ஏற்றிக்கொல்லப்பட்ட 4 விவசாயிகளின் அஸ்தி பேரணியாக தமிழகம் முழுவதும் 23/10/2021 முதல் 26/10/2021 வரை பயணமாக கொண்டுசெல்லப்படுகிறது.... பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்..
அவ்வாறு எடுத்துவரப்பட்டு காஞ்சிபுரம் மாவட்டம், தேரடி காந்திரோட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கொல்லப்பட்ட விவசாயிகளின் அஸ்தியை விவசாய சங்கத்தினரிடம் ஒப்படைக்கும் நிகழ்வானது நடைபெற்றது இதில் 100-க்கும் மேற்பட்ட அனைத்து விவசாய சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
தலைமை
சாரங்கன் நேரு மூர்த்தி மோகன் செல்வம் கமலநாதன் மேகநாதன் சங்கர் டில்லி பாய் முருகேசன் பெருமாள்
சிறப்புரை
சண்முகம். பி. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநில பொது செயலாளர் பாலகிருஷ்ணன் SKM மாநில ஒருங்கிணைப்பு குழு நேரு விவசாய சங்கம் காஞ்சிபுரம்
No comments
Thank you for your comments