Breaking News

மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைக்க கோரிக்கை

வேப்பூர் அக்.2-

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள பொயனப்பாடி ஊராட்சியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இக்கிராமத்தில்  மிகவும் சக்தி வாய்ந்த பொயனப்பாடி ஆண்டவர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலுக்கு கடலூர், சேலம், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி மற்றும் பல மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வந்து  சாமி தரிசனம் செய்து செல்வார்கள்.

கோயிலுக்கு  அருகே சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.

அதில் வெளியூர்களில்  இருந்து கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இவ்வளாகதினை குளிக்கவும், இயற்கை உபாதை கழிக்கவும்   பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில்  சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வளாகம் பராமரிப்பின்றி பழுதடைந்து இருக்கின்றது. இதனால்,  திருக்கோயிலுக்கு  வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நீராடுவதற்கும் இயற்கை உபாதை  கழிப்பதற்கும் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

மேலும் வளாகத்தை  சுற்றி செடி கொடிகள் முளைந்து புதர்களாக உள்ளதால் விஷ     ஜந்துகள் காணப்படுகின்றன.


எனவே பழுதடைந்துள்ள மகளிர் சுகாதார வளாகத்தை சரிசெய்து, பக்தர்கள்  பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டுமென பக்தர்கள்  கோரிக்கை வைக்கின்றனர்.

Also Read 👉 காலச்சக்கரம் செய்தி எதிரொலி: சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை

No comments

Thank you for your comments