Breaking News

ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் அஸ்டபத்தன தேவபிரசன்னம்

கன்னியாகுமரி:

குமரி மாவட்டத்தில் பிரசித்தபெற்ற திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் அஸ்டபத்தன தேவபிரசன்னம் கேரளா நம்பூதிரிகள் தலைமையில் நடைபெற்றது. நாளை குடமுழுக்குக்கு நாள் குறிக்கபடுகிறது 

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவட்டார் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில் குடழுக்கு நாள் குறிக்கும் தேவபிரசன்னம் ஆலய தந்திரி கல்பமங்கலத்து மணலிக்கரமடம்,(மாத்தூர் மடம்) சங்கரநாராயணரூ நம்பூதிரி முன்னிலையில்  கேரளா மாநிலத்தை திருவல்லா மாவட்டம் சிற்றேழத்துமனையை சேர்ந்த ஸ்ரீவாசுதேவன் பட்டதிரி தலைமையில் நடைபெற்றது.

இந்த தேவபிரசன்னம் குறித்து ஸ்ரீவாசுதேவன் பட்டதிரி கூறுகையில் , தேவபிரன்னம் முறையாக நடைபெறும் விதமாக மிருந்துஞ்சய ஹோமம்  நடத்தவும் ,ஆலயத்தில் இறைவனுக்கு தோஷமான செயல்கள் நடைபெற்றுள்ளது எனவும், ஆலயத்தில் பூஜைகளுக்கு சுத்தமான சந்தனம் பயன்படுத்தவேண்டும், கோவிலில் உள்ள வாகனங்களை பராமரித்து பூஜைகள் மேற்கொள்ளவேண்டுமெனவும்,

ஆலயத்திற்குட்பட்ட ஆலய சொத்துகள் கையகபடுத்தபட்டுள்ளதாகவும் தற்போது 40சதவீத சொத்துகள் கூட இல்லை எனவும், ஆலயத்திற்குட்பட்ட 12காவுகளை பராமரிக்கவேண்டுமெனவும் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில் திருப்பணிகளுக்கு தேவைக்கதிகமாக பண உதவிகள் வந்து சேரும் எனவும் தெரிவித்தவர்கள் சூரிய அஸ்தமமானதால் தேவபிரசன்னம் மற்றும் குடமுழுக்குக்கு நாள் குறிப்பது  நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.

👮உறைய வைக்கும் Police Commemoration Day- வில் வீரவணக்கம் பாடல்...

இந்த தேவபிரசன்னத்தின்போது திருவிதாங்கூர் சமஸ்தான கவுடியார் அரண்மனை பிரதிநிதி லட்சுமிபாய் ,மாவட்ட அறங்காலர்குழுதலைவர் சிவகுற்றாலம் , இந்து சமய அறநிலைத்துறை மாவட்ட பராமரிப்பு பணிகள் பொறியாளர் ராஜ்குமார், ஆலய செயல் அலுவலர் மோகனகுமார் ,மற்றும் ஆலய குடமுழுக்கு குழு உறுப்பினர்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர்.



No comments

Thank you for your comments