100 நாள் வேலை பணி செய்யும் பெண்கள் திடீர் சாலை மறியல்
கிருஷ்ணகிரி
வெப்பாளம்பட்டியில் ஊராட்சி மன்ற நிர்வாக குறைபாடுகளை கண்டித்து 100 நாள் வேலை பணி செய்யும் பெண்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். பிறகு போலிஸார் பேச்சுவார்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் பெண்கள் கலைத்து சென்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் அருகேயுள்ள வெப்பாளம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் மற்றும் துணை தலைவர் தங்கமணி என்பவரது கணவர் வெங்கட்டேசன் ஆகியோர் 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்யும் பணிதளபொறுப்பாளராக உள்ள சசிகலா என்பவர் 100 நாள் நிறைவடைந்த நிலையில் புதிதாக வேறொருவரை புதியதாக நியமிக்க ஆவலக்கம்பட்டி கிரமத்தை சேர்ந்த சௌந்தர்யா என்பவரை நியமிக்க வேண்டுமென்று ஊராட்சி மன்ற தலைவரை கிராம மக்கள் முறையிட்டுள்ளனர்.
👮உறைய வைக்கும் Police Commemoration Day- வில் வீரவணக்கம் பாடல்...
இதற்கு மறுப்பு தெரிவித்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற துணை தலைவர் தங்கமணிவெங்ட்டேசன் ஆகியோரை கண்டித்து ஆவலக்கம்பட்டி கிராம பெண்கள் எங்கள் பகுதியை சேர்ந்தவர்களுக்கு இந்தமுறை வாய்ப்பளிக்க வேண்டுமென்று சந்தூர் போச்சம்பள்ளி சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து விரைந்துவந்த போச்சம்பள்ளி போலிஸார் பேச்சுவார்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உருதியளித்ததின் பேரில் பெண்கள் கலைத்து சென்றனர்.
திடீரென சாலைமறியல் நடைபெற்ற சம்பவத்தால் இப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.
No comments
Thank you for your comments