Breaking News

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு நடிகர் விஜய் அதிரடி உத்தரவு

சென்னை, அக்.27-

மத்திய, மாநில அரசிடம் இருந்து மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கேட்டு மக்களுக்கு உடனடியாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிறைவேற்றி தர வேண்டும் என நடிகர் விஜய் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் சமீபத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 129 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.  அதில், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 2 நபர்களும், துணைத் தலைவர் பதவிக்கு 12 நபர்களும் மற்றவர்கள் வார்டு உறுப்பினர்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் சென்னையில்  நடிகர் விஜயை நேற்று சந்தித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு விஜய்’ஆல் த பெஸ்ட் கூறினார். மத்திய, மாநில அரசிடம் இருந்து மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கேட்டு மக்களுக்கு உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் என நடிகர் விஜய் அறிவுறித்தினார்

மக்களுக்கு செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்த 11 அம்சம் கொண்ட திட்ட படிவத்தை அளித்துள்ளதாகவும் இயக்கத்தில் யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது தளபதி உரிய நடவடிக்கை எடுப்பார் என்று ரசிகர் மன்றத்தலைவர் புஸ்ஸி ஆனந்த கூறினார்.

முன்னதாக, காலையிலேயே நடிகர் விஜய் வீட்டு முன்பு ரசிகர்கள் குழுமியிருந்தனர். ஆனால் விஜய் உடனடியாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை. ஒரு வழியாக மாலை 3 மணிக்கு பொறுப்பாளர்களை சந்தித்ததால் அமளிக்கு இடமில்லாமல் ரசிகர்கள் அமைதியாக கலைந்தனர்

No comments

Thank you for your comments