Breaking News

பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் தலைவர் கான்சிராம் 15ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் தலைவர் கான்சிராம் 15ம் ஆண்டு நினைவு நாள் விருத்தாசலத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தனர்.

அக்டோபர் 9 பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கான்சிராம் 15ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கடலூர் மேற்கு மாவட்டம் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில்  விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில் மலர்களால் அறிவிக்கப்பட்டுள்ள கான்சிராம் திருவுருவப்படத்திற்கு மாவட்ட தலைவர் ஐயாசாமி தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில் முருகன், அருட்செல்வன், நெய்வேலி தொகுதி ஜோதி முருகன், துணை தலைவர் சிவப்பிரகாசம் ஆகியோர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் விருத்தாசலம் தொகுதி தலைவர் லட்சுமணன், இளைஞரணி செயலாளர் அருணாச்சலேஸ்வரர், அஜித், தொகுதி பொதுச்செயலாளர் பிச்சமுத்து, செந்தில், ரவி, திருசங்கு, ஒளி அழகன், மதியழகன், வல்லரசு, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமான பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

No comments

Thank you for your comments