எறையூர் திமுக வேட்பாளர்கள் வரிசையில் நின்று வாக்குப்பதிவு..!
காஞ்சிபுரம் மாவட்டம், எறையூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு தி.மு.க., சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சசிரேகா சரவணன் ஊராட்சி நடுநிலைப் பள்ளி ஓட்டுச் சாவடியில் தனது வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றினார்.
இந்த ஓட்டுச் சாவடியில் பிற்பகலில் இருந்து வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஓட்டுக்களை பதிவு செய்தனர். வேட்பாளர் சசிரேகா எறையூர் ஊராட்சியின் முதல் வார்டு செயலராகவும் இருந்து வருகிறார்.
இதேபோல், ஸ்ரீ பெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம் 16வது ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க., வேட்பாளராக பரமசிவமன் களம் இறங்கியுள்ளார். இவருக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் பரமசிவன் எறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தனது மனைவி ராஜேஸ்வரியுடன் வந்து ஓட்டுப் போட்டார்.
வேட்பாளர் பரமசிவன் ஸ்ரீ பெரும்புதூர் ஒன்றிய தி.மு.க., துணை செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.


No comments
Thank you for your comments