குப்பைகளை தரம் பிரிக்க வேண்டும்... விடுதிகள் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் - தொகுப்பு செய்திகள்
வேலூர் மாநகராட்சி இரண்டாம் மண்டலத்துக்கு உட்பட்ட வார்டு 28, காந்தி ரோடு பகுதியில் விடுதிகளில் இருந்து கொண்டுவரப்படும் குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வரப்படுகிறதா என்று 2வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆய்வு செய்தார். அப்போது ஒரு சிலர் பிரிக்காமல் கொண்டு வந்த குப்பைகளை, பிரித்துக் கொண்டு வரும்படி திருப்பி அனுப்பப்பட்டது. மேலும் அனைத்து விடுதிகள் உரிமையாளர்களிடம் குப்பைகள் பிரிக்காமல் கொண்டு வந்தால் அபராதம் விதிக்கப்படும் என இரண்டாம் மண்டல சுகாதார அலுவலர் அறிவுறுத்தினார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் மனி உரிமைப் போராளியும் காட்பாடி மூத்த வழக்கறிஞருமான பாலு அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது, சுற்றுசூழல் மூத்த எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்கள் எழுதிய பசுமை பூங்கா சிறுவர் நாடக நூலையும், சிந்து சீனு எழுதிய பாலு வாத்தியாரும் கூனி பாட்டியும் என்ற சிறுகதைத் தொகுப்பு நூலையும், சாந்தி கல்வி தொண்டு அறக்கட்டளை நிறுவனர் தமிழரசன், பொருளாளர் சசிகலா , சிறப்பு அழைப்பாளர்கள் முஜிப் ரகுமான், ஜான்சன் ஜெயகரன் வெளியிட்டனர். சமூக ஆர்வலரும் எழுத்தாளருமான சிந்து சீனு கலந்து கொண்டு மரியாதை நிமித்தமாக சந்தித்து மக்களுக்கு பயன்தரும் சில ஆலோசனைகளை வழங்கினார்கள்.
காட்பாடி அடுத்த லத்தேரி அருகில் உள்ள அண்னங்குடி பகுதியில் வசிக்கும் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தியை தமிழகத்தின் சார்பில் அரசு வழக்கறிஞராக நியமனம் செய்யபட்டடார். பாமக வேலூர் மாநகர அமைப்பு செயளாளர் சி.நாயுடு பாபு மரியாதை நிமித்தமாக அவரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
No comments
Thank you for your comments