Breaking News

தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியினர் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கடலூர் :

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மங்களூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுமுளை ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் சிறுமூளை வீரராஜன் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக கட்சியின் நிறுவனர் தயா.பேரின்பம் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

அதில் சிறுமுளை கிராமத்தில் அடிப்படை வசதிகள் ,சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதிகள் செய்து தரவில்லை எனவும் மற்றும் ரேஷன் கடையை உடனடியாக போர்க்கால அடிப்படையில் அமைத்துதர தரவேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதில் மங்களூர் ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார் நல்லூர் ஒன்றிய செயலாளர் கலியன் கிளை நிர்வாகிகள் பெரியசாமி ஆசைத்தம்பி கணேசமூர்த்தி அனிதா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


No comments

Thank you for your comments