Breaking News

ஆர்.வேலூர் ஊராட்சி மன்ற தலைவராக அன்னலட்சுமி ஜெயகிருஷ்ணன் பதவி ஏற்பு

திருப்பூர், அக்.20-

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி, உடுமலை ஒன்றியம்  ஆர்.வேலூர் ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பிற்கான இடைத்தேர்தலில்   மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர், திருப்பூர் புறநகர் (கி) மாவட்டக் கழகச் செயலாளர்  சி.மகேந்திரன் ஆதரவுடன்  மாபெரும் வெற்றி  பெற்ற  திருமதி அன்னலட்சுமி ஜெயகிருஷ்ணன், ஆர்.வேலூர் ஊராட்சி மன்ற தலைவராக  இன்று 20/10/2021 புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

மேலும் இந்த வெற்றிக்கு கடுமையாக பாடுபட்ட கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், வாக்காளப் பெருமக்களுக்கும்  சட்டமன்ற உறுப்பினர்  நன்றி தெரிவித்தார்.

உடன் உடுமலை வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் செழியன், ஊராட்சி மன்ற தலைவர்கள் இராகல்பாவி சுமதி செழியன், பெரிய வாளவாடி தேவராஜ், போடிபட்டி சௌந்தர்ராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் மோகன் ராஜ், மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்.


🔥Also Read  👍 விதிகளை மீறும் தி சென்னை சில்க்ஸ்! துணை போகின்றதா மாநகராட்சி..?-பகீர் குற்றச்சாட்டு

No comments

Thank you for your comments