Breaking News

கொட்டையூர் ஊராட்சி மன்ற தலைவரை வெட்டிவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்

திருவள்ளூர், அக்.20-

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், கொட்டையூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளவர் யுவராஜ், தினமும் காலை 10 மணிக்கு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்த இவர், வழக்கம்போல் இன்று காலை அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.



அப்போது சுமார் பத்தரை மணி அளவில் இரு சக்கர வாகனத்தில் வந்த 5 பேரில் 3 பேர் முகத்தில் கர்ச்சீப் கட்டிக்கொண்டு மற்றும் கருப்பை கட்டி கொண்டு கத்தியுடன் ஊராட்சி மன்ற தலைவர் தலைவர் அலுவலகத்தில் புகுந்து ஊராட்சி மன்ற தலைவர் யுவராஜை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனை சற்றும் எதிர்பாராத யுவராஜ் அவர்களிடமிருந்து தப்பி தப்பி ஓடிய நிலையில் அருகிலிருந்த ஊராட்சி செயலாளர் வினோத் கூச்சலிட கிராமத்தினர் மர்ம நபர்களை பிடிக்க முயன்று உள்ளனர். ஆனால் 5 பேரும் இருசக்கர வாகனத்தில் வேகமாக தப்பியுள்ளனர்.

பின்னர் கை மற்றும் உடல் பகுதிகளில்  பலத்த காயம் அடைந்த ஊராட்சி மன்ற தலைவர் யுவராஜை மீட்டு திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மப்பேடு காவல் நிலைய போலீசார் மர்ம இளைஞர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

வெட்டுக் காயங்களுடன் உயிர் தப்பிய ஊராட்சி மன்ற தலைவர் யுவராஜ் தற்போது திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

🔥Also Read  👍 விதிகளை மீறும் தி சென்னை சில்க்ஸ்! துணை போகின்றதா மாநகராட்சி..?-பகீர் குற்றச்சாட்டு

இதனிடையே கைதிகளை விரைந்து பிடிக்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி சந்திரதாசன், மணவாளநகர் ஆய்வாளர் அந்தோணி ஸ்டாலின், உதவி ஆய்வாளர்கள் சுரேஷ்,இளங்கோ தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை மூலம் கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு....

No comments

Thank you for your comments