ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்ற கோரிக்கை மனு
காஞ்சிபுரம், அக்.26-
காஞ்சிபுரம், பெருநகராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் 320 பேரை நிரந்தரப் பணியாளர்களாக மாற்ற கோரி சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் மற்றும் ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
காஞ்சிபுரம் பெருநகராட்சி 51வட்ங்களை உள்ளடக்கி நாள்தோறும் நகரின் அனைத்துப்பகுதிகளும் பல லட்ச டன் எடையுள்ள கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்தி வருகின்றனர்.
இப் பணிகளுக்காக பெருநகராட்சியில் 170 நிரந்தர பணியாளர்களும் , 320 ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த 320 தூய்மைப்பணி ஆளும் கடந்த 15 வருடங்களாக பெருநகராட்சி காக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு மாத ஊதியமாக தற்போது வரை ரூபாய் 9 ஆயிரத்து 500 மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது. இன்றைய காலகட்டத்தில் குடும்ப வாழ்வதற்கு பணம் போதுமானதாக இல்லை எனவும் தங்களது பிள்ளைகளின் கல்வி, பெற்றோர்களின் மருத்துவச் செலவு என நிகழ்வும் நிலையில் கொரோனா காலத்திலும் பணி விடுமுறை இன்றி தங்கள் பணியை திறம்பட செய்து பெருநகராட்சி நற்பெயரை ஏற்படுத்தினோம்.
ஆகவே ஒப்பந்தப் பணியாளர்கள் ஆக பணிபுரியும் தங்களை நிரந்தரப் பணியாளர்களாக ஆக்கக் கோரி பரிந்துரை மேற்கொள்ள வேண்டுமென காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் மற்றும் காஞ்சிபுரம் நகராட்சி ஆணையாளர் லட்சுமி ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதுகுறித்து ஒப்பந்த தொழிலாளர்கள் கூறுகையில், 15 வருடங்களாக மக்களின் நலனுக்காக சேவை புரிந்துவந்தோம், கொரோனா காலத்திலும் உயிரை பணையம் வைத்து பணி புரிந்து நற்பெயரை ஏற்படுத்தியிருந்த நிலையில் தங்களை கருணை உள்ளம் கொண்டு நிரந்தரப் பணி ஆக்கி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவ வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.
No comments
Thank you for your comments