Breaking News

இந்தியா உட்பட பல நாடுகளில்.. வாட்ஸ் அப், இண்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் சேவைகள் முடக்கம்..

 சென்னை:

இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் வாட்ஸ் அப், இண்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் சேவைகள் 20 நிமிடத்துக்கும் மேலாக முடங்கி உள்ளன. சேவைகளை தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக வாட்ஸ்-அப் வெளியிட்ட அறிக்கையில் விளக்கம் அளித்துளளது.

உலகம் முழுவதும் அனைவரின் ஆறாம் விரலாக திகழ்வது மொபைல் போன் ஆகும். அதன் முக்கிய பங்காக திகழ்வது வாட்ஸ்அப் எனப்படும் அப்ளிகேஷன். 

இன்றைய நவீன உலகில் பேஸ்புக்(Facebook), இண்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் வாட்ஸ் (WhatsApp) உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்தாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இதனை பயன்படுத்தாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு வந்து விட்டோம்.



பொதுவாக தற்போதைய காலகட்டத்தில் அனைவரின் அனைத்து வேலைகளையும் மற்றும் அனைத்து விருப்பங்களையும் எளிதாக பூர்த்தி செய்ய அனைவராலும் தேர்வு செய்யப்பட்ட விஷயங்களில் முதன்மையாக இருப்பது வாட்ஸ்அப் எனப்படும் தகவல்களை உடனுக்குடன் அனைவருக்கும் பகிர  இருக்கும் ஒரு அப்ளிகேஷன்....

செய்திகளை அறிந்து கொள்ளவும், ஒருவருக்கு செய்திகளை அனுப்பவும், புதிய தகவல்களை பரிமாறிக் கொள்ளவும் வீடியோக்கள் வெளியிடவும்   மிகவும் உதவிகரமாக உள்ளன  வாட்ஸ் அப், இண்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் சேவைகள்.

இன்று பெரும்பாலும் வியாபாரங்களுக்கு, அதுவும் கொரோனா காலத்தில் பெரிதும் உதவியது சமூக வலைதளங்களே...  மக்களை ஒன்று  இணைக்கும் பாலமாக உள்ளது என்று சொன்னாலும் மிகையாகாது...

இந்த நிலையில் வாட்ஸ் அப், இண்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் சேவைகள் பல இடங்களில் முடங்கி இருக்கிறது. 

இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்த சேவை முடங்கியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த சேவைகள் முடங்கி உள்ளன. இன்ஸ்டாகிராமின் 1 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள், சேவை முடங்கியதாக புகார் அளித்தனர்.

25,000 க்கும் மேற்பட்ட பயனர்கள் வாட்ஸ்அப் சேவையில் சிக்கல்கள் உள்ளதாக புகாரளித்தனர். பேஸ்புக் மெசஞ்சர் பயனர்களும் சிக்கல்களை எதிர்கொண்டனர். 

இந்த திடீர் சேவை முடக்கத்தால் வாட்ஸ்-அப்பில் செய்திகளை அனுப்பவும், வரும் செய்திகளை தெரிந்து கொள்ளவும் முடியவில்லை. சுமார் 30 நிமிடத்துக்கும் மேலாக இந்த சேவைகள் முடங்கி இருக்கின்றன.

இந்த சேவைகள் முடக்கம் குறித்து, பயனர்கள் டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர், இந்தியா உட்பட பல நாடுகளில் இந்த சேவைகள் இயங்ககவில்லை என்று ஹாஷ்டேக்கில் போட்டு வருகின்றனர். 

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சேவை முடங்கியுளளதாகவும், சேவைகளை தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் வாட்ஸ்-அப் வெளியிட்ட அறிக்கையில் விளக்கம் அளித்துளளது.

தற்போது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வரும் நிலையில், அதுவும் சென்னை அணியின் மேட்ச் நடந்து வரும் நிலையில் இது தொடர்பான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட முடியவில்லை என்று கிரிக்கெட் ரசிகர்கள் பலர் வருத்தப்பட்டனர். 

இந்த ஆண்டு மார்ச் மாதம், பேஸ்புக் (Facebook), வாட்ஸ்அப் மற்றும் புகைப்பட பகிர்வு தளமான இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள் உலக அளவில் செயல்படாமல் முடங்கிய போது ​​இந்தியா உட்பட உலகளவில் மில்லியன் கணக்கான பயனர்கள் அது குறித்து புகார் அளித்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

தற்போது,  டிவிட்டரில் பேஸ்புக் டவுன், வாட்ஸ்அப் டவுன் என ட்ரெண்டாகி வருகிறது.  தற்போது திடீரென மூன்று செயலிகளும் ஒரே நேரத்தில் முடங்கியதால்  பயனாளிகள் அவதிக்குள்ளாகினர்.

தற்போது நமது இணையதளவாசிகள் இதையும் விட்டுவைக்கவில்லை... பலவிதமாக மீம்ஸ்  போட்டு இதையும் கொண்டாடி வருகின்றனர்... 

ரணகளத்திலும் ஒரு குதூகலம்.... என்று டிவிட்டரில் வீடியோ, புகைப்படம் பதிவிட்டு  டிரண்டாக்கி வருகின்றனர்... 


டிவிட்டரில்   டிரண்டாகி வரும்  புகைப்படம்  







 

No comments

Thank you for your comments