காஞ்சிபுரத்தில் மாவட்ட கருவூல அலுவலக கட்டடம் திறப்பு
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் மாவட்ட கருவூல அலுவலக கட்டிடத்தை தமிழக முதல்வர்-திமுக தலைவரும்மான மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இன்று (25-10-2021) திங்கட்கிழமை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்திலுள்ள ரூபாய் 4 கோடியே 96 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மாவட்ட கருவூல அலுவலக கட்டிடத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமை செயலகத்திலிருந்து கானொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழக ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் குத்துவிளக்கேற்றி இனிப்புகள் வழங்கினார்.
இந்நிகழ்வில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ,மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை ஆ.மனோகரன், மாணவரணி செயலாளர்-காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் எம்.எஸ்.சுகுமார், மாவட்ட வருவாய் கோட்டாச்சியர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் திமுக மாவட்ட அவைத்தலைவர் சி.வி.எம்.அ.சேகரன், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார் பி.சேகர், திருநீர்மலை ஜெயக்குமார், பூபாலன், க.குமணன், டி.குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.




No comments
Thank you for your comments