தொழிற்பழகுநர் (அப்ரண்டிஸ்) சேர்க்கை முகாம் அறிவிப்பு
ஈரோடு, அக்.2-
தமிழ்நாடுஅரசின் வேலைவாய்ப்புமற்றும் பயிற்சித்துறையில் தொழிற்பழகுநர் (அப்ரண்டிஸ்) சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தகவல் தெரிவித்துள்ளார்.
தேசியதொழிற்பழகுநர் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறைசார்பாக ஈரோடு மாவட்டஅளவில் தொழிற் பழகுநர்களுக்கான ‘தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்” ஈரோடு அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் 08.10.2021-அன்று (காலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை)நடைபெறவுள்ளது.
இம்முகாமில் மத்திய / மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை முன்னனி நிறுவனங்களும் பங்கேற்று 500-க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப உள்ளனர். இதில் பங்கேற்று தேர்வு பெற்றால் தொழிற்பழகுநர் பயிற்சி அளிக்கப்பட்டு, மத்திய அரசின் தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் (NAC) வழங்கப்படும். தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் (NAC) பெற்றவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலையில் முன்னுரிமை வழங்கப்படும். மேலும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் NAC பெற்றவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கிறது.
தற்போது தொழிற் பழகுநருக்கான உயர்த்தப்பட்ட உதவித் தொகை தொழிற்பிரிவுகளுக்கு ஏற்ப ரூ.7700 முதல் கிடைக்கும். அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் தொழிற் பயிற்சி பெற்று, தேர்ச்சி பெற்ற அனைவரும் உரிய அசல் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் பங்கேற்று பயன் அடையலாம்.
மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9442494266, 9443384133 என ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

No comments
Thank you for your comments